டப்பிங் பேச நயன்தாரா தயங்குவது ஏன்..?

 

படங்களில் உணர்ச்சி பாவங்களை கொட்டி நடிக்கிறார். மலையாளி என்பதால் நன்றாக மலையாளம் பேசுகிறார்.. ஆனால் டப்பிங் விஷயத்தில் மட்டும் இப்போதுவரை சொந்தக்குரலில் பேச தயக்கம் காட்டுகிறார் நயன்தாரா. தற்போது அவர் நடித்துள்ள ‘பாஸ்கர் தி ராஸ்கல்ஸ்’ படத்திற்காக அவரையே டபிங் பேசும்படி மம்முட்டியும் சித்திக்கும் தைரியம் கொடுத்தாலும் திட்டமாக மறுத்துவிட்டார் நயன்தாரா.

இதுபற்றி சித்திக் குறிப்பிடும்போது, “ ஷூட்டிங்ஸ்பாட்டில் நடிக்கும்போது, உணர்ச்சிகரமாக ஏற்ற இறக்கத்துடன் பேசுவது போல டப்பிங்கிலும்  தன்னால் அந்த அளவுக்கு உணர்வுகளை கொண்டுவரும் அளவுக்கு பேசமுடியுமா என்கிற தயக்கம் நயன்தாராவுக்கு இருக்கிறது. அதனால் தான் அவர் டப்பிங் பேச தயங்குகிறார்” என்கிறார் படத்தின் இயக்குனர் சித்திக்.