மணிரத்னம் படத்தில் கார்த்தி நடிப்பது எப்போது..?

karthi

கோகுல் இயக்கத்தில் கார்த்தி நடித்துவரும் ‘காஷ்மோரா’ படத்தின் படப்பிடிப்பு ஜரூராக நடைபெற்றுவருகிறது.. இதன் படப்பிடிப்பு ஜுன் முதல் வாரத்தில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை முடித்தவுடன் அடுத்ததாக மணிரத்னம் டைரக்சனில் உருவாக இருக்கும் படத்தில் நுழைகிறார் கார்த்தி.

அதேநேரம் ‘காஷ்மோரா’ டப்பிங்கையும் கிடைக்கும் இடைவெளியில் முடிக்க திட்டமிட்டுள்ளார் கார்த்தி.. மணிரத்னம் படத்தையும் முடித்ததும் அடுத்ததாக ‘சதுரங்க வேட்டை’ புகழ் இயக்குனர் வினோத்தின் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் கார்த்தி. ஆக ஒரு படம் முடிந்ததும் அடுத்த படம் என கார்த்தியின் பிளான் பக்காவாக இருக்கிறது.