அனுஷ்காவின் ‘ராணி ருத்ரமாதேவி’ ரிலீஸ் எப்போது…?

 

அனுஷ்காவுக்கு முப்பது வயதுக்கு மேல் ஆகிவிட்டது என்னவோ உண்மைதான். ஆனால் முன்னெப்போதையும் விட இப்போது தான் கவனமாக கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதற்கேற்ற மாதிரி அவரது நடிப்புக்கு தீனிபோடுவது போல தொடர்ந்து சரித்திரப்படங்களாக அவரைத்தேடி வருகின்றன. தற்போது, தெலுங்கில் குணசேகர் இயக்கத்தில் ‘ராணி ருத்ரமாதேவி’ என்ற படத்திலும் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில்‘பாஹுபாலி’ என்ற சரித்திர  படத்திலும் நடித்து வருகிறார் அனுஷ்கா.

இதில் ‘ராணி ருத்ரமாதேவி’ படத்தில் காகதீய தேசத்து ராணியாக நடித்திருக்கிறார் அனுஷ்கா.. ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும்  ராணா இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா தான் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.. தற்போது இன்ன தேதி என குறிப்பிடாவிட்டாலும், எப்படியும் மார்ச் மாதம் படம் வெளியாவது உறுதி என்கிறார்கள்.