விஜய்சேதுபதிக்கும் டி.ராஜேந்தருக்கும் என்ன கனெக்சன்..?

t.r
ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் கே.வி.ஆனந்த் டைரக்சனில் விஜய்சேதுபதி நடிக்கும் படத்தில் முக்கியமான வேடம் ஒன்றில் டி.ராஜேந்தர் நடிக்க இருக்கிறார்.. ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கும் இந்தப்படத்தில் ஹீரோயினாக மஞ்சிமா மோகன் நடிக்கலாம் என தெரிகிறது.ஐ.டி.கம்பெனிகளின் பின்னணியை கதைக்களமாக கொண்டு இதன் கதை பின்னப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது..

இதில் விஜய்சேதுபதி ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிபவராகவும் டி.ராஜேந்தர் இதுபோன்ற நிறுவனங்களுக்கு ஆட்களை சப்ளை பண்ணும் ஏஜெண்ட்டாகவும் நடிக்கிறார்களாம். மொத்தம் நான்கு மாதங்களில் 80 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ள கே.வி.ஆனத ஜூலை-1ஆம் தேதி முதல்கட்ட படப்பிடிப்பை துவங்க இருக்கிறாராம்..