புத்தாண்டை வரவேற்கும் ‘என்னை அறிந்தால்’ இசை…!

 

இந்த வருடத்தின் கடைசி நாளிலும் அடுத்து தொடங்கும் 2௦15ஆம் வருடத்தின் முதல் நாளிலும் தனது ரசிகர்களை எல்லையில்லா மகிழ்ச்சியில் ஆழ்த்த முடிவு செய்துவிட்டார் ‘தல’. காரணம் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘என்னை அறிந்தால்’ படத்தின் இசை டிச-31ஆம் தேதி நள்ளிரவு தான் வெளியாக இருக்கிறது..

ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் தனது நண்பருடன் சேரும் படம் என்பதால் ஹாரிஸ் ஜெயராஜின் இசை மிரட்டும் என எதிர்பார்க்கலாம். அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா மற்றும் த்ரிஷா இருவரும் நடித்துள்ளார்கள். விவேக் முக்கிய வேடத்தில் நடிக்க, வில்லனாக நடித்திருக்கிறார் அருண்விஜய். படம் பொங்கலுக்கு வருவது ஏற்கனவே உறுதியாகியுள்ளது.