கஷ்டப்பட்டு உழைக்கிறோம் என இனி சொல்லாதீர்கள்” – விஜய்சேதுபதி பளீர் பேச்சு..!

 

ஆடாம ஜெயிச்சோமடா, ஜீவா படங்களை தொடர்ந்து கிரிக்கெட் கதைக்களத்தில் வெளிவர இருக்கும் இன்னொரு படம் தான் ‘1பந்து 4ரன் 1விக்கெட்’.. ஆனால் இதில் கிரிக்கெட்டில் ஹாரரையும் காமெடியையும் மிக்ஸ் பண்ணி விளையாடியிருக்கிறார்களாம்.

இந்தப்படத்தை வீரா என்பவர் இயக்கியுள்ளார். வினய்கிருஷ்ணா, ஹாசிகா தத், சென்ராயன், லொள்ளுசபா ஜீவா ஆகியோர் நடித்துள்ள இந்தப்படத்திற்கு உமேஷ் இசையமைக்க, நா.முத்துகுமார், சினேகன், ஹோசிமின் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். இந்தப்படத்தை சக்சேனா வெளியிடுகிறார். படம் டிச-5ஆம் தேதி வெளியாகிறது.

இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் விஜய்சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஆச்சர்யம் அளித்தார். இதில் விஜய்சேதுபதி பேசும்போது, “இங்கே பேசிய பலர் கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறோம் என அடிக்கடி குரிப்பிட்டார்கள்.. சினிமா மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் உழைப்பு என்றாலே அது கஷ்டப்படுவது தான். உழைக்காமல் எந்த வெற்றியும் கிடைக்காது. நம் வேலையை நாம் பாட்டுக்கு செய்துகொண்டிருப்போம்.. அதனால் இனிமேல் கஷ்டப்பட்டு உழைத்தேன் என யாரும் சொல்லாதீர்கள்” என புதுமையான விளக்கம் சொல்லி அமர்ந்தார்.