“மீண்டும் இணைந்து பணிபுரிய விரும்பினால் அது சூர்யாவுடன் தான்” ; செல்வராகவன்..!

Surya - selvaragavan

அத்திப்பூத்தாற்போல படங்களை இயக்குபவர் இயக்குனர் செல்வராகவன்.. ஆனால் ஒவ்வொரு படத்திலும் ரசிகர்களிடம் ஏதாவது ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தி விடுவார். அந்த வகையில் ஒரு சிறிய இடைவெளிக்குப்பிறகு தற்போது சூர்யாவை வைத்து ‘என்ஜிகே’ என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார் செல்வராகவன்.

அரசியல் பின்னணியில் இந்தப்படம் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தப்படத்தில் சூர்யாவுடன் பணியாற்றிய தனது அனுபவம் குறித்து செல்வராகன் தனது ட்விட்டர் பக்கத்தில் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா..?

“நான் மீண்டும் இணைந்து பணியாற்ற விரும்பும் நடிகர் என்றால் அது சூர்யா தான்.. அவரது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வு மற்றும் அற்புதமான நடிப்பால் என்னை திகைக்க வைத்துவிட்டார்’ என கூறியுள்ளார் செல்வராகவன்..

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப்படத்தில் சாய் பல்லவி, ராகுல் பிரீத்தி சிங் ஆகியோர் கதாநாயாகிகளாக நடித்துள்ளனர். தீபாவளி வெளியீடாக இந்தப்படம் வெளியாக இருக்கிறது.