வெளிநாட்டில் துப்பறியும் தமிழக போலீஸ் அதிகாரியாக விவேக்

நடிகர் விவேக் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘வெள்ளைப்பூக்கள்’. இந்தப் படம் இந்த மாதம் 19-ம் தேதி வெளிவரவுள்ளது. அமெரிக்காவில் கதை நடைபெறுவதாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தப் படத்தில் விவேக்குடன் இணைந்து நாயகனாக ஜே.கார்த்திக், சார்லி உட்பட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்தப்படத்தை விவேக் இளங்கோவன் இயக்கியுள்ளர். ஐவரும் அமெரிக்கா வாழ் தமிழர் தான்.

இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது.அப்போது படம் குறித்து தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்ட விவேக், “நீண்ட நாளைக்குபிறகு நான் கதாநாயகனாக நடித்து ஒரு படம் வந்திருக்கிறது. பொதுவாகவே நான் ஹீரோவாக நடித்த படங்களுக்கு ஏதாவது ஒரு சிக்கல் வரும். ‘நான் தான் பாலா படம் வெளியானபோது கமலின் பாபநாசம் படம் வெளியாகி என் படத்தை நாசம் பண்ணியது. அதனால் இந்தப்படத்தில் நடிக்க தயங்கினேன். அதுமட்டுமில்லாமல் இந்தக்கதை சத்யராஜ் சார் நடித்தல் சரியாக இருக்கும் என இயக்குனரிடம் கூறினேன்.. இதுவரை போலீஸாக நடிக்காத நபர் நடித்தால் தான் நன்றாக இருக்கும் என கூறி எனை சம்மதிக்க வைத்துவ்ட்டனர்” என கூறினார்.

இந்தப்படம் வரும் ஏப்-19ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது,.