கேரளாவில் 309 தியேட்டர்களில் விவேகம் ரிலீஸ்…!

vivegam malayalam release

வரும் ஆக-24ஆம் தேதி மிக ‘விவேகம்’ பிரமாண்டமாக ரிலீஸாக இருக்கிறது. அஜித் சிவா மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் என்பதால் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது கேரளாவிலும் இந்தப்[படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. கேரளாவின் சுவர்களில் திரும்பிய பக்கமெல்லாம் விவேகம் படத்தின் போஸ்டர்கள் தான் அலங்கரிக்கின்றன.. இது போதாதென்று ரசிகர் மன்றங்களும் தங்களது பங்கிற்கு போஸ்டர்கள், பிளக்ஸ், கட் அவுட் என கலக்கி வருகின்றனர்..

படத்தை வாங்கி வெளியிடுவது ‘புலி முருகன்’ பட தயாரிப்பாளர் என்பதால் பப்ளிசிட்டியில் தூள் கிளப்பி வருகிறார். கேரளாவில் எண்ணிக்கையில் விஜய் ரசிகர்களை விட அஜித் ரசிகர்கள் குறைவாகவே இருக்கிறார்கள் என சொல்லப்பட்டு வரும் நிலையில் இதுவரை இல்லாதவகையில் 309 தியேட்டர்களில் ‘விவேகம்’ ரிலீசாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.