கிருஷ்ண ஜெயந்தி நாளில் ‘விவேகம்’ ரிலீஸ் பணிகள் துவங்கின..!

vivegam release

சிவா இயக்கத்தில் மூன்றாவது முறையாக அஜித் நடித்துள்ள ‘விவேகம்’ படம் வரும் ஆக-24ஆம் தேதி வெளியாவது ஏற்கனவே உறுதியாகிவிட்டது.. காஜல் அகர்வால், அக்சரா ஹாசன் நடிப்பில் அனிருத் இசையமைத்துள்ள இந்தப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது..

இன்று கிருஷ்ண ஜெயந்தி தினம்.. இந்த நல்லநாளில் ‘விவேகம்’ படத்தின் ரிலீஸ் தொடர்பான பணிகள் தொடங்கிந. குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் தியேட்டர் புக்கிங் தொடர்பான ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின. படத்தின் ட்ரெய்லர் விரைவில் வெளியாக இருக்கின்றன.

அஜித் படங்களில் விநியோக வியாபாரத்தில் இந்தப் படம் முதன்மையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. பாடல்கள், டீஸர், போஸ்டர்கள் என அனைத்துமே மக்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது தான் இதற்கு காரணம்” என்று படக்குழுவினர் தெரிவித்தார்கள். மேலும் ‘விவேகம்’ வியாபாரத்தினால் தயாரிப்பாளர்களும் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.