‘காலா’வுக்கு முன்பாக ‘விஸ்வரூபம்-2’ ரிலீஸ்….?

vishwaroopam-2-trailer-release

கமல் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் படம் ஹிட்டனத்தை தொடர்ந்து, விஸ்வரூபம்-2’ படத்தையும் இரண்டு வருடங்களுக்கு முன்பே எடுத்து முடித்துவிட்டார் கமல். ஆனால் தயாரிப்பாளர் தரப்பில் ஏற்பட்ட சில பொருளாதார பிரச்சனைகள் காரணமாக இந்தப்படம் வெளிவராமல் முடங்கி கிடந்தது.

தற்போது அரசியல் கட்சியை துவக்கியுள்ள கமல், இந்த சமயத்தில் விஸ்வரூபம்-2’ படத்தை ரிலீஸ் பண்ணும் வேலகளிலும் மும்முரம் காட்டி வருகிறார். அந்த வகையில் ரஜினியின் ‘காலா’ ஏப்ரல்-27ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் நிலையில் அதற்கு முனதாக, அதுவும் மார்ச் இறுதியிலோ அல்லது ஏப்ரல் முதல் வாரத்திலோ ரிலீஸாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக விரைவில் இந்தப்படத்தின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக, ரஜினிக்கு முன்னதாகவே கட்சியை ஆரம்பித்ததைப்போல, பட ரிலீசிலும் கமல் அவரை முந்திக்கொள்வார் என்றே தெரிகிறது.