விசிறி – விமர்சனம்

தீவிரமான அஜித் ரசிகரான நாயகன், பேஸ்புக் எதிரியான விஜய் ரசிகரின் தங்கையை காதலிக்கிறார். விஜய் ரசிகையான நாயகிக்கும் அவரது அண்ணனுக்கும் நாயகன் அஜித் ரசிகன் என தெரியவருகிறது.. முடிவு என்ன ஆனது..?

இன்றைய தேதியில் இணையதளத்தில் மோதிக்கொள்ளும் ஒருசில அஜித்-விஜய் ரசிகர்களின் விடலைத்தனமான சேட்டைகளை முழுப்படமாக தொகுத்துள்ளார்கள்.. ‘தல வெறியன்’ சிவாவாக நடித்திருக்கும் ராம் சரவணா தான் படத்தின் நாயகன். அஜித் ரசிகராக இருந்துகொண்டு நாயகியை ‘வால்ட்’ அடிக்கும் எண்ணத்துடன் சுற்றுபவராக காண்பித்திருக்கத்தான் வேண்டுமா..?

தளபதி ரசிகன்’ கில்லி சூர்யாவாக ராஜ் சூர்யா நடித்துள்ளார். இரண்டு ஹீரோ படமென்றாலும், இவருக்கான காட்சிகள் மிகக் குறைவே.. ரசிக மனநிலையை மேம்போக்காகக் காட்டுவதால், இரண்டு நாயகன்கள் மீதும் மனம் ஒட்டவில்லை.

மேலும், தளபதி ரசிகனாக இருந்தால் தான் காதலிப்பேன் என கண்டிஷன் போடும். நாயகியாக ரெமோனா ஸ்டெஃபனி நடித்துள்ளார். இந்தக்கதைக்கு இவர் தான் சரியாக இருப்பார் என்கிற இயக்குனரின் கணிப்பை நியாயப்படுத்தியுள்ளார். படத்தில் நியாயமான விசிறிகளின் மனநிலையையோ, உளவியலையோ படத்தின் கதாபாத்திரங்கள் பிரதிபலிக்காதது மிகப்பெரும் குறை.

தவிர இருதரப்பினரும் அடித்துக்கொள்வதாகவும் போஸ்டர்களை ஓட்டுவது கிழிப்பது போன்ற வேலைகளை மட்டுமே செய்வதாக முக்கால்வாசி படம் நகர்கிறது. அஜித் பற்றி விஜய் ரசிகர் கலாய்ப்பது, விஜய் பற்றி அஜித் ரசிகர் கலாய்ப்பது போன்ற காட்சிகள் மூலம் இரண்டு தரப்பையும் பேலன்ஸ் செய்திருக்கிறார் இயக்குனர் வெற்றி மகாலிங்கம்..

நிஜ வாழ்க்கையில் நடிகர்கள் ஒற்றுமையாக இருந்தாலும் படம் பார்க்கும் ரசிகர்கள் மனதில் எதிரியாக சித்திரிக்கப்படுவதால் ஏற்படும் விளைவுகள் பற்றி பாடம் எடுத்திருந்தாலும் க்ளைமாக்ஸிற்காக இரண்டு ரசிகர்களையும் ஒன்று சேர்த்திருக்கிறார்கள்.. அதை பாராட்டித்தான் ஆகவேண்டும்.