விஷ்ணுவின் ‘ஜீவா’ இப்போ விஷால் கையில்..!

 

சுசீந்திரன் இயக்கியுள்ள ‘ஜீவா’ திரைப்படம் பரபரப்பாக ரிலீசுக்கு தயாராகி வருகிறது. கபடி விளையாட்டில் வெற்றிக்கோட்டை தொட்ட சுசீந்திரன் இப்போது கையில் எடுத்திருப்பது கிரிக்கெட் மட்டையை. கபடி வீரனான தான் அறிமுகப்படுத்திய விஷ்ணுவை இப்போது  ‘ஜீவா’ என்கிற கிரிக்கெட் வீரனாக மாற்றி இருக்கிறார்..

விஷ்ணுவுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்க, சூரி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இப்போது இந்தப்படத்தை தமிழ்நாடு முழுவதும் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் வெளியிடுகிறார் விஷால். செப்-26ஆம் தேதி படம் ரிலீசாகிறது.