மின்னணு கழிவு பயங்கரத்தை மையப்படுத்தி உருவாகிறதா விஷாலின் ‘இரும்புத்திரை’..?

irumputhirai

அரசியல் அரங்கில் சமீபத்தில் பரபரப்பை கிளப்பிய விஷால், தற்போது ‘இரும்புத்திரை’ படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். பொங்கலுக்கு இந்தப்படத்தை திரையிட வேண்டும் என்பதால் முழுவீச்சுடன் பணிகள் நடைபெற்று வருகின்றன..

சமந்தா நாயகியாக நடித்துவரும் இப்படத்துக்கு யுவன் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் வில்லனாக அர்ஜூன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படம் முழுக்க டிஜிட்டல் குற்றங்களைப் பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்று சொல்லப்பட்டு வருகிறது..

இந்தநிலையில் சமீபத்தில் வெளியான இந்தப்படத்தின் 3வது லுக் போஸ்டர் இந்தப்படம் மின்னணு கழிவுகள் குறித்த அபாயத்தை சொல்லவருகிறதா என்கிற இன்னொரு புதிய யூகத்தையும் கிளப்பிவிட்டுள்ளது. உபயோகப்படுத்தப்படாமல் தூக்கி எறியப்படும்போது மின் பொருட்கள் உருவாக்கும் குப்பைகள்தான் இந்த மின்னணு கழிவுகள் சீனா உட்பட, தத்தம் மின் கழிவுகளை நாட்டை விட்டு வெளியேற்றிவிடுகின்றன. அவற்றை நாம் குறைந்தவிலைக்கு வாங்கி நம்நாட்டை குப்பையாக்கிக்கொண்டிருக்கிறோம் என்கிற குற்றச்சாட்டு பல நாட்களாக இருந்து வருகிறது..

இதன் பின்னணியில் உள்ள அரசியல் மற்றும் குற்றங்களை இந்தப்படம் வெளிச்சம் போட்டு காட்ட இருக்கிறதோ என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.