விஷால் படத்திற்கு ‘U’ சான்றிதழ்..!

 

வருடத்திற்கு இரண்டு கமர்ஷியல் ஹிட் படங்களை தரக்கூடிய அனைத்து திறமைகளும் உள்ள இயக்குனர் சுந்தர்.சியும், படத்தை ஆரம்பிக்கும்போதே ரிலீஸ் தேதியை சொல்லிவிட்டு தயாரிப்பாளராகவும் நடிகராகவும் தீயா வேலை செய்யும் விஷாலும் இணைந்துள்ள படத்திற்கு ‘ஆம்பள’ என டைட்டில் வைத்தது ஏக பொருத்தம் தான்.

காதலுக்கு ஹன்ஷிகா, காமெடிக்கு சந்தானம், சதீஷ் ஆகியோருடன் பிரபு, ஐஸ்வர்யா, கிரண், ரம்யாகிருஷ்ணன், வைபவ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் உண்டு. பல்லவி, சரணம் எதுவுமே தெரியாத ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ள்ளார்.  இந்தப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘U’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். சொன்னது சொன்னபடியே பொங்கலுக்கு ரிலீஸாகிறான் இந்த ‘ஆம்பள’.