ராதாரவி இடத்தில் விஷாலின் தந்தை..!

சரத்குமாருக்கு எதிராக விஷால் போட்டியிட இருப்பது போன்ற சூழல் இருப்பதால், அதேபோல ராதாரவிக்கு எதிராக விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி நிற்பாரோ என கன்னாபின்னாவென்று கற்பனை குதிரையை ஓட்டவேண்டாம். இது விஷாலின் தந்தை, படத்தில் நடிப்பது பற்றிய விஷயம்.

ஜி.கே.ரெட்டி மிகப்பெரிய தயாரிப்பாளர் என்றாலும் இதுவரை ஒரு படத்தில் கூட, சின்ன ரோலில் கூட தலைகாட்டியதில்லை. ஆனால் கன்னடத்தில் ரீமேக்காகும் ‘பிசாசு’ படத்தில் ராதாரவியின் கேரக்டரை ஏற்று நடிக்க ப்ரெஷ்ஷாக ஒரு புதுமுகத்தை தேடிவந்தார்கள்.

அப்போதுதான், படத்தின் ஹீரோவாக நடிக்கும் நவரசன், விஷாலை அணுகி அவரது தந்தையை நடிக்க வைக்க கேட்டுள்ளார். ஜி.கே.ரெட்டியும் ஒகே சொல்லியதோடு நடித்தும் கொடுத்துவிட்டாராம். நடிப்பது ஈஸிதான் என நினைத்துக்கொண்டிருந்த ஜி.கே.ரெட்டிக்கு கேமரா முன் நின்றதும் தான் அது எவ்வளவு சவாலான விஷயம் என்பது புரிந்ததாம். சமீபத்தில் தன் தந்தை எப்படி நடிக்கிறார் என அந்த படப்பிடிப்பு தளத்துக்கு ஒரு விசிட் அடித்துவிட்டு வந்தாராம் விஷால்.