“சமரசம் இல்லை…. ராதிகா சிம்புவுக்கு நன்றி” – விஷால்..!

நாடக நடிகர்களை சந்தித்து ஆதரவு கேட்க கிளம்பிய விஷாலின் பயணம் சேலத்தை முடித்துவிட்டு நாமக்கல்லை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறது. அவர் இப்படி பயணப்பட்டு கொண்டிருக்கையில் நேற்று, ராதிகா, சிம்பு இருவரும் பிரஸ்மீட் வைத்து விஷாலை தாக்கி பேசினார்கள், ராதிகா விஷாலை ரெட்டி என பெயருடன் சேர்த்தும், சிம்பு அவரை ஒருமையில் விளித்தும் பேசினார்..

ஆனால் இது எதற்கும் எதிர்த்து பதிலளிக்காமல் அமைதியாக ராதிகாவுக்கும் சிம்புவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் விஷால்.. காரணம் அவர்களின் பேச்சால் இன்னும் தெம்பு கூடியுள்ளதாக சொல்லும் விஷால், சிம்பு மீது தனக்கு கோபமில்லை என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமல்ல, தேர்தல் வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருப்பதால் இனி சமரசம் என்கிற பேச்சுக்கே இடம் இல்லை என்றும் கூறிவிட்டார் விஷால்.