பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விஷால் தயார்..!

 

நாளுக்கு நாள் சீரியசாகத்தான் ஆகிக்கொண்டிருக்கிறது நடிகர்சங்க மோதல். அதிலும் வரும் ஜூலை-19ஆம் தேதி நடிகர்சங்க தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், சீனியர்-ஜூனியர் இருவரிடையே மோதல் வெளிப்பட்டு வருகிறது. இதில் முக்கியமாக உருளுவது விஷாலின் தலைதான்.

நேற்று ஒரு தொலைக்காட்சி விவாதத்தின்போது ராதாரவி, “விஷாலை அழைத்து பேசும் அளவுக்கு அவர் அவ்வளவு பெரிய ஆள் இல்லை” என சொல்லியுள்ளார். இதனால் இப்போது சந்தேகத்திற்கு இடமின்றி பொதுச்செயலாளர் பதவிக்கு ராதாரவியை எதிர்த்து போட்டியிட முடிவுசெய்துள்ளார் விஷால்.

நடிகர் சங்க தலைவர் பதவிக்கு சரத்குமாரை எதிர்த்து நிற்க இருக்கிறார் நாசர். சங்கத்தின் நலனும், நடிகர் சங்க கட்டடத்தை காப்பாற்றுவதும் தான், தான் தேர்தலில் குதிக்க காரணமே அன்றி, இதில் தனது சுயநலம் எதுவும் இல்லை என விஷால் தெரிவித்துள்ளார்.