விஷால் படத்தில் நிகிதாவுக்கு ஒரு சிங்கிள் டான்ஸ்..!

சுசீந்திரன் விஷாலை வைத்து தான் இயக்கிவரும் ‘பாயும் புலி’ படத்திற்காக சமீபத்தில் பின்னி மில்லில் போடப்பட்ட மிகப்பெரிய மார்க்கெட் செட் ஒன்றில் படப்பிடிப்பை நடத்தியுள்ளார்.. மார்க்கெட் செட் என்றால் அது ஒன்னு பைட் ஆக இருக்கும்.. இல்லைன்னா டான்ஸ் ஆகத்தானே இருக்கணும்.. சுசீந்திரனும் ஒரு சூப்பரான பாடல் காட்சியைத்தான் படமாக்கியுள்ளார்.

டி.இமான் இசையமைத்துள்ள இந்தப்பாடலில் சரோஜா, அலெக்ஸ் பாண்டியன் புகழ் நிகிதா தான் சூப்பரான ஆட்டம் போட்டிருக்கிறாராம். சரோஜா படத்தை தயாரித்த நிறுவனம் தான் இந்தப்படத்தையும் தயாரிப்பதால் சென்டிமென்ட்டாக நிகிதாவும் வந்துபோகட்டுமே என நினைத்து இந்த பாடல் வாய்ப்பை வழங்கியுல்லார்கலாம்.

ஐந்து நாட்கள் படமாக்கப்பட்ட இந்த பாடல், இன்னொரு ‘பை பை பை’ போல ஹிட்டாகும் என நம்பலாம். நிஜத்தில் நடைபெற்ற சம்பவங்களின் அடிப்படையில் மதுரை பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் விஷால் போலீஸ் ஆபிஸராக நடிக்க, அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.