புதுக்கோட்டையில் நாடக நடிகர்களை சந்தித்தார் விஷால்..!

கடந்த தீபாவளி சமயத்தில் திருச்சியில் நடந்த நாடக நடிகர் உதவி விழங்கும் விழாவில் நாசர் பற்றி அநாகரிகமாக பேசிய ராதாரவி மற்றும் காளை ஆகியோருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என வலியுறுத்தி இருந்தார் விஷால்.. பின் ஒருசமயம் நாடக நடிகர்களை அவர்கள் இடத்திற்கே சென்று சந்திப்பேன் என்றும் கூறியிருந்தார் விஷால்.

அதன் ஒரு கட்டமாக புதுக்கோட்டையில் உள்ள நாடக நடிகர்களை சந்தித்தார் விஷால். அவர்களும் விஷாலுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.. நடிகர்சங்க தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் சங்கத்தில் அதிக வாக்குகள் உள்ள நாடக நடிகர்களை விஷால் சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் விஷாலோ, “தேர்தலுக்காக நாடக நடிர்களை சந்திக்க வரவில்லை. அவர்கள் பார்க்க விரும்பியதால் வந்தேன்.. நடிகர்சங்க சொத்து தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு விடக்கூடாது. அதில் கட்டடம் கட்டி உறுப்பினர்கள் அனைவரும் இலவசமாக அதனை பயன்படுத்திக்கொள்ள வழிவகை செய்யவேண்டும். அதற்கான உத்தரவாதம் கிடைக்காவிட்டால் நான் தேர்தலில் போட்டியிடுவது தவிர்க்க முடியாததாகி விடும்” என்று கூறியுள்ளார்.