கன்னட ஹீரோவை தமிழில் அறிமுகப்படுத்தும் விஷால்..!

kgf

கன்னட சினிமாவில் முதல் முறையாக பல கோடி ரூபாய் செலவில் மிகப்பிரம்மாண்டமாக தயாராகியிருக்கும் படம் ‘கே.ஜி.எஃப்’. இப்படத்தில் ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ் ஹீரோவாக நடித்திருக்கிறார். பாகுபலி, 2.O’ போன்ற பிரம்மாண்ட படங்களின் வரிசையில் கே.ஜி.எஃப் படமும் இந்திய அளவில் பேசப்படும் படமாக இருக்கும் என்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, கன்னட சினிமாவை அடுத்த கட்டத்திற்கு இந்தப்படம் கொண்டு செல்லும் என்கிறார் ஹீரோ யஷ். கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தை தமிழில் நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி மூலம் வெளியிடுகிறார். இதற்கான அறிமுக விழாவில் ஹீரோ யஷ்ஷை அறிமுகப்படுத்தி வைத்தார் விஷால்.

இந்தப்படம் வரும் டிச-21ஆம் தேதி வெளியாக இருக்கிறது.