மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கினார் விஷால்..!

vishal cycle help

சொல்வது மட்டுமல்ல, சொன்னபடியே பல விஷயங்களை செய்துகாட்டுவதில் முனைப்பாக இருக்கிறார் நடிகர்சங்க செயலாளரான விஷால். அதற்கு உறுதுணையாக அவர் உருவாக்கியுள்ள தேவி அறக்கட்டளை துணை நிற்கிறது.

அந்தவகையில் திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் உள்ள டான்போஸ்கோ பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பல கிராமங்களில் இருத்து பல கிலோமீட்டர் தூரம் நடந்து வருவதை அறிந்த நடிகர் விஷால் அவர்கள் உடனே தனது தேவி அறக்கட்டளையின் மூலம் அந்த மாணவர்கள் மிக சுலபமாக வருவதற்கு 35 இரு சக்கர மிதி வண்டிகளை வழங்கினார்.