மிஷ்கினை விலைக்கு வாங்கிய விஷால்..!

தற்போது மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் படத்தில் நடித்துள்ளார் விஷால். இந்தப்படம் வரும் செப்-14ல் திரைக்குவர இருக்கிறது. இதில் பிரசன்னா, வினய், பாக்கியராஜ், அணு இமானுவேல் ஆண்ட்ரியா உள்ளிட்ட ஐந்து பேர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். விஷாலின் சினிமா கேரியரில் அவர் நடித்த முழு நீள ஸ்டைலிஷான படம் துப்பறிவாளன் தான் என்கிரா விஷால்.

“துப்பறிவாளன்” டிடெக்டிவ் ஜானர் படம். துப்பறிவாளன் ஷெர்லக் ஹோம்ஸ் மாதிரியான ஒரு படம். பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கர் நடித்த துப்பறியும் படங்கள், தெலுங்கில் கிருஷ்ணா நடித்த துப்பறியும் படங்கள் போன்ற ஒரு படமாக இது இருக்கும். என்னுடைய வாழ்க்கையிலேயே பாடல்கள் இல்லாமல் வெளியாகும் முதல் படம் துப்பறிவாளன் தான். தவிர இந்த படத்துக்கு பாடல்கள் தேவை இல்லை” என்கிறார் விஷால்.

“இப்படத்துக்காக மிஷ்கின் ஸ்டைல் கண்ணாடி மாட்டி நடித்துள்ளேன். மிஷ்கினுக்கு என்னுடைய உடல் மொழி ஸ்டைல் என்று அனைத்தையும் மாற்ற வேண்டும் என்று ஆசை. துப்பறிவாளனில் வரும் சைனீஸ் ஹோட்டல் சண்டை காட்சி ரசிகர்களை மிரட்டும். இந்த சண்டை காட்சியில் நடிக்க வியட்நமிலிருந்து சண்டை கலைஞர்கள் வந்தார்கள். ஸ்டன்ட் கலைஞர்கள் ஏழு பேரோடு ஒரேடியாக அடுத்தடுத்து சண்டை போட்டது புதுமையாக இருந்தது. சண்டை காட்சிக்கு கோரியோ தினேஷ் மாஸ்டர்… ஆனால் சண்டை காட்சி இப்படி தான் இருக்க வேண்டும் என்று பேப்பரில் வரைந்து அதை வடிவமைத்தவர் இயக்குநர் மிஷ்கின் தான்” என மிஷ்கின் புகழ்பாடும் விஷால் செய்திருக்கும் இன்னொரு காரியம் என்ன தெரியுமா..?. .

“துப்பறிவாளன் வந்தால் இன்னும் புதுமையான நல்ல படங்கள் வரும் என்று எதிர்பார்க்கிறேன். அடுத்து நன் நடித்துள்ள இரும்புத்திரை, சண்டக்கோழி-2, டெம்பர் ரீமேக் என்று வித்தியாசமான படங்கள் வரவுள்ளது. அதுமட்டுமல்ல நான் இயக்குநர் மிஷ்கினை விலைக்கு வாங்கிவிட்டேன்… அவர் அடுத்து இயக்கும் படம் எனது நிறுவனத்துக்குத்தான். தொடர்ந்து என்னை வைத்து படங்கள் இயக்குவார் மிஷ்கின்” என கூறி ஆச்சர்யப்படுத்துகிறார் விஷால்.

நடிகர் சங்கம் மட்டுமில்லாமல், தயாரிப்பாளர் சங்க பணிகளையும் கவனித்துக்கொள்வதால், படங்களில் நடிக்கும் நேர குறையுமே.. வருமானம் அடிபடுமே என்கிற கேள்வியை விஷால் முன் வைத்தோம்..

“இனிமேல் ஏழைகளுக்கு உதவி செய்வது போல் , பாட்டி தூக்கிக்கொண்டு போவது போல் காட்சிகளில் நடித்து மக்களை ஏமாற்ற முடியாது… நான் கோடிகளை அடுத்த வருடம் கூட சம்பாத்தித்து இருப்பேன். இப்போது நான் கோடிகளை சம்பாதிப்பதில் கவனம் செலுத்தியிருந்தால் திரையுலகமே இருந்திருக்காது. திரையுலகத்தை காப்பாற்றுவது தான் இப்போது எனது ஒரே குறிக்கோள். இரண்டு படம் தள்ளிப்போனது எனக்கு லாஸ் தான். நான் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என்று உழைக்காமல் இருந்திருந்தால் பல படங்களில் நடித்து 20 கோடிக்கு மேல் சம்பாத்திருப்பேன். ஆனால் திரையுலகம் தான் இப்போது எனக்கு மிகவும் முக்கியம்” என்கிறார் விஷால்.