வெற்றிமாறனின் ‘விசாரணை’க்கு வெனிஸ் நகரம் தந்த அங்கீகாரம்..!

நமது தமிழ் திரைப்படங்கள் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பரிசுகளை அள்ளி வந்திருக்கின்றன. காக்கா முட்டை, குற்றம் கடிதல் போன்ற படங்கள் நிறைய திரைப்பட விழாக்களில் கலந்து பரிசுகளை அள்ளியதோடு, உலகத்தாரின் கவனத்தையும் கவர்ந்திருக்கின்றன. ஆனால் இப்போது வெற்றிமாறன் இயக்கியுள்ள ‘விசாரணை’க்கு கிடைத்துள்ள கெளரவம் அலாதியானது.

இதுவரை வெனிஸ் திரைப்பட விழாவில் நமது படங்கள் திரையிடப்பட்டு இருக்கின்றன. ஆனால் அவை நாமே விரும்பி திரையிட்டுக்காட்டும் பிரிவில் தான் இடம்பெற்றன. ஆனால் இந்த 72 வருட தமிழ்சினிமா வரலாற்றில் போட்டிப்பிரிவில் கலந்துகொண்டு திரையிட தேர்வாகியுள்ள ஒரே படம் ‘விசாரணை’ தான்.

அதிலும் போட்டியில் கலந்துகொண்ட கிட்டத்தட்ட 2500 படங்களில் சலித்து சல்லடை செய்யப்பட்டு, திரையிட தேர்வான சில படங்களில் தான் ‘விசாரணை’யும் இடம்பிடித்துள்ளது. இதுவே மிகப்பெரிய அங்கீகாரம். அதேபோல போட்டியில் வெற்றியும் பெற்று விருதுகளையும் தட்டிவரும் என உறுதியாக நம்பலாம்.