ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்குள் நுழைய தேர்வானது ‘விசாரணை’..!

visaranai
வெற்றிமாறன் இயக்கத்தில் அவரும் தனுஷும் இணைந்து தயாரித்த படம் தான் ‘விசாரணை’.. ஏற்கனவே இவர்கள் கூட்டணி தயாரிப்பில் உருவான ‘காக்கா முட்டை’ படம் தேசிய விருது உட்பட பல சர்வதேச விருதுகளை அள்ளியதுபோல, ‘விசாரணை’ படம் பல விருதுகளை அள்ளி கவுரவம் பெற்றது..

இந்தியாவில் இருக்கும் அனைத்து இயக்குனர்களுக்குமே தங்களது படம் ஆஸ்கர் விருது பெறவேண்டும் என்கிற ஆசை இருக்கும். அட்லீஸ்ட், அந்த விருதுக்கான போட்டியில் கலந்துகொண்டால் கூட கிட்டத்தட்ட விருதைப்பெற்ற திருப்தி ஏற்படும்..

அந்தவகையில் ‘விசாரணை’ படம் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் படங்களில் தமிழ் மொழிப்படங்கள் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.. இதுகுறித்த தனது சந்தோஷத்தையும் இதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றியையும் படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் தெரிவித்துள்ளார்.