‘வி.ஐ.பி-2’ இறுதிநாள் சூட்டிங்கில் ரஜினி சர்ப்ரைஸ் விசிட்..!

rajni in vip-2 spot

சூப்பர் ஹிட்டடித்த ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார் சௌந்தர்யா ரஜினிகாந்த். முதல் பாகத்தில் கதாநாயகியாக நடித்த அமலாபால் இதிலும் தொடர, பாலிவுட் நடிகை கஜோல் இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தின் படத்துக்கவிழா அன்று கலந்துகொண்டு படத்தை துவக்கி வைத்தார் ரஜினி..

அதேபோல இந்தப்படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பின்போது தயாரிப்பாளர் தாணுவுடன் ஷூட்டிங்ஸ்பாட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்தார் ரஜினி.. சிறிதுநேரம் சௌந்தர்யா டைரக்சன் பண்ணும் அழகை பார்த்து ரசித்த ரஜினி, தனுஷ் உட்பட படக்குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு கிளம்பினார்.