வி.ஐ.பி-2’வுக்கு இசையமைப்பாளரை மாற்றியது ஏன்..? ; தனுஷ் விளக்கம்..!

vip 2 pressmeet

தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற படம் தான் வேலையில்லா பட்டதாரி.. தற்போது அதன் இரண்டாம் பாகம் வி.ஐ.பி-2 என்கிற பெயரில் உருவாகியுள்ளது.. கலைப்புலி தாணு இந்தப்படத்தை தயாரித்துள்ளார். முதல் பாகத்திற்கு இசையமைத்த அனிருத்துக்கு பதிலாக ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். அனிருத் இசையமைக்காததற்கு பலரும் பலவிதமான காரணங்களை சொல்லி வந்தார்கள்..

இந்நிலையில் நேற்று இரவு வி.ஐ.பி-2 படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது இசையமைப்பாளர் விஷயத்தில் விளக்கம் அளித்து தனுஷ் பேசினார்..” முதல் பாகத்தை காட்டிலும் இரண்டாம் பாகத்தின் கதையம்சம் சற்று மாறுபட்ட கோணத்தில் பார்க்கப்பட வேண்டியது என்பதால் ஷான் ரோல்டனின் இசையை தேர்ந்தெடுத்தேன். மீண்டும் மூன்றாம் பாகும் எடுக்கும் ஐடியா இருக்கிறது. அதற்கு அனிருத்தின் இசை தேவைப்பட்டால் மீண்டும் அவரை பயன்படுத்துவேன்” என கூறினார்..

இந்தநிகழ்வில் நடிகை கஜோல், இயக்குனர் சௌந்தர்யா ரஜினி, சமுத்திரக்கனி, இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், எடிட்டர் பிரசன்னா ஆகியோர் கலந்துகொண்டனர்.. வி.ஐ.பி-2 படம் வருகிற ஜூலை 28 ஆம் தேதி, தனது பிறந்த நாளன்று வெளியாவதில் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார் தனுஷ்.