‘வி.ஐ.பி-2’ ; சௌந்தர்யா அதிரடி மாற்றம்..!

soundarya_rajinikanth-directs-vip-2

கடந்த சில வாரங்களுக்கு முன் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனுஷை வைத்து ஒரு படம் இயக்கப்போவதாக அறிவிப்பு வெளியானது.. படத்திற்கு ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என டைட்டில் வைக்கப்பட்டும் இருந்தது.. கலைப்புலி தாணுவுடன் இணைந்து தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் இந்தப்படத்தை தயாரிக்க, ஷான் ரோல்டன், அனிருத் இருவரும் இணைந்து இசையமைப்பதாக இருந்தது..

ஆனால் இப்போதும் கூட மேற்கூறிய டெக்னீசியன்கலீல் எந்தவிதம் மாற்றமும் இல்லைதான். ஆனால் சௌந்தர்யாவோ தான் அடுத்து இயக்கவிருக்கும் படம் தனுஷின் சூப்பர்ஹிட் படமான ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகத்தைத்தான் என அறிவித்துள்ளார். அப்படியானால் பெயரை மற்றும் தான் மாற்றியுள்ளார்களா, இல்லை, படமே வேறு படமா என்பது போகப்போகத்தான் தெரிய வரும்.