கன்னிராசி படத்தில் பிரமாண்ட கொலு பண்டிகை காட்சி..!

kannirasi golu

நடிகர் விமல் ‘மன்னர் வகையறா’ படத்தை அடுத்து ‘கன்னிராசி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விமலுக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார். படத்தை எஸ்.முத்துக்குமரன் இயக்கி வருகிறார்.

ஒரே குடும்பத்தில் உள்ள அனைவரும் ‘கன்னிராசி’யில் பிறக்கின்றனர். அவர்களுக்கு காதல் திருமணம் நடக்கிறது. கடைக்குட்டி விமல் மட்டும் காதலை வெறுக்கிறார். அப்போது எதிர்வீட்டுக்கு வரலட்சுமி குடி வருகிறார். இருவரும் காதலர்கள் ஆகிறார்களா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை.

நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படத்தில் கொலு பண்டிகை பாடல் இடம்பெறுகிறது. இதற்காக 2 ஆயிரம் பொம்மைகள் வாங்கப்பட்டதாம்.. இந்தப் படத்தை ஷமீம் இப்ராகிம் தயாரிக்கிறார். படத்தில் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகிபாபு உட்பட பலர் நடிக்கின்றனர். படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்து வருகிறார்