விமல் படத்தின் டைட்டில் மாறியது..!

இயக்குநர் சீமான் மற்றும் சுசிகணேசனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய நாகேந்திரன் தற்போது ‘நீயெல்லாம் நல்லா வருவடா’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் விமலும், இயக்குனர் சமுத்திரக்கனியும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். வெளிநாடுவாழ் தமிழ்ப்பெண்ணான அமிர்தா ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

சமீபத்தில் இந்தப்படத்தை காவல்துறை உயர் அதிகாரிகள பலரை அழைத்து போட்டுக்காட்டினார் இயக்குனர் நாகேந்திரன். கூலிப்படைகளை வேரறுக்கும் போலீசாரின் வீரத்தை பற்றிய படம் என்பதால் படத்தை வெகுவாக பாராட்டிய அதிகாரிகள் ‘இவ்வளவு நல்ல படத்திற்கு தலைப்பு தான் பொருத்தமாக இல்லை’ என தங்களது கருத்தையும் சொல்லியிருக்கிறார்கள்.

அதனால் படத்திற்கு தப்போது ‘காவல்’ என கம்பீரமாக டைட்டில் வைத்துள்ளார்கள். ‘அறிந்தும் அறியாமலும்’, ‘பட்டியல்’ போன்ற படங்களை தயாரித்த புன்னகைப்பூ கீதா, எஸ்.ஜி.பிலிம்ஸ் மற்றும் கிளாப் சினிமாஸ் உடன் இணைந்து இந்தப்படத்தை தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார்.