செம கலாட்டாவாக உருவாகும் விமல்-வரலட்சுமியின் ‘கன்னிராசி’..!

kannirasi 1

விமல், வரலட்சுமி இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு ‘கன்னிராசி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு முன் பிரபு-ரேவதியை வைத்து இதே போல உருவான ‘கன்னிராசி’ படம் தான் இயக்குனராக பாண்டியராஜனை நமக்கு அறிமுகப்படுத்தியது.. அதேபோல இந்த கன்னிராசி படம் மூலம் முத்துக்குமரன் என்பவர் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

கதைப்படி விமலின் குடும்பத்தில் உள்ள அனைவரும் கன்னிராசி என்பதால் காதல் திருமணமே அவர்களுக்கு நடக்கிறது. இதனால் கன்னிராசி’காரரான விமல் தனது திருமணம் பெற்றவர்களாக பார்த்து நிச்சயிக்கப்பட்டு நடக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

இந்தநிலையில் விமலின் வீட்டிற்கு எதிர்வீட்டில் வரலட்சுமி குடிவர, அதன்பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் மொத்தப்படமும். ஆக காமெடி கலாட்டாவிற்கு எந்த குறையும் இருக்காது என்பதை இப்போதே உறுதியாக சொல்லமுடியும்.