ஜெயம் ரவி வில்லன்..! ஹன்சிகா வில்லி..!!


1947களில் இருந்த ஒரு கவித்துவமான காதலை எதிர்பார்க்கும் ஹீரோவுக்கும், 2025-ல் தன் வாழ்கையை எப்படிப் பாதுகாப்பாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்று பிராக்டிக்கலாக யோசிக்கும் ஹீரோயினுக்கும் இடையே ஏற்படும் சுவாரஸ்யமான காதலை, ஜாலியாக சொல்லும் படம் தான் ‘ரோமியோ ஜூலியட்’.

‘எங்கேயும் காதல்’ படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி, ஹன்சிகா இருவரும் இந்தப்படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். இந்தப்படத்தை இயக்கும் லஷ்மன் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். காதல் கதை என்றாலே காதலர்களை பிரிக்க நிச்சயமாக வில்லன்கள் இருப்பார்கள் தானே..?

இந்தப்படத்திலும் இருக்கிறார்கள். ஆனால் முறுக்கு மீசை வில்லன்கள் எல்லாம் இல்லை. ஜெயம் ரவியும் ஹன்சிகாவும் தான் தங்கள் காதலுக்கு தாங்களே வில்லன்கள். முதல் பாதியில் ஹன்சிகா வில்லியாகவும் இடைவேளைக்குப்பின் ஜெயம் ரவி வில்லனாகவும் மாறுகிறார்களாம். அது ஏன் என்பதுதான் கதையின் சுவராஸ்யமான சஸ்பென்சாம். இது புதுசா இருக்கே..?