விக்ராந்தை கைதூக்கி விட முயற்சிக்கும் சுசீந்திரன்..!

vikranth
தற்போது விஷ்ணுவை வைத்து ‘மாவீரன் கிட்டு’ என்கிற படத்தை இயக்கிவருகிறார் சுசீந்திரன்… தற்போது இதன் போஸ்ட் புரடக்சன் வேலைகள் ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. இன்னொரு பக்கம் தனது அடுத்த படத்திற்கான வேலைகளிலும் கவனம் செலுத்தி வருகிறாராம் சுசீந்திரன்.

இந்தநிலையில் விக்ராந்தை வைத்து அவர் படம் இயக்கப்போவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே ‘பாண்டியநாடு’ படத்தில் விஷாலின் நண்பனாக கெஸ்ட் ரோலில் நடித்துக்கொடுத்து சுசீந்திரனின் குட்புக்கில் இடம்பிடித்திருப்பவர்தான் விக்ராந்த்.. அதுமட்டுமல்ல இவருடன் மாநகரம் பட ஹீரோவான சந்தீப் கிஷனும் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.