விக்ரம் படத்தை இயக்கும் விஷாலின் நண்பன்..!

thiru directs vikram
விஷாலை வைத்து ‘தீராத விளையாட்டு பிள்ளை, ‘சமர்’, ‘நான் சிவப்பு மனிதன்’ என மூன்று படங்களை இயக்கியவர் திரு.. இதுவரை இவர் இயக்கியதும் இந்த மூன்று படங்கள் தான். அந்த அளவுக்கு விஷாலின் திக் பிரண்ட்டான இவர் இந்தமுறை தனது நான்காவது படத்தில் இயக்கப்போவது சீயான் விக்ரமைத்தான்..

ஜீவா நடித்த சிங்கம்புலி படத்தை தயாரித்த நிறுவனம் தான் இந்தப்படத்தையும் தயாரிக்கிறது. தற்போது அரிமாநம்பி ஆனந்த்சங்கர் இயக்கத்தில் நடிக்கும் விக்ரம், இவர்கள் இருவர் இயக்கத்திலும் ஒரே நேரத்தில் நடிக்க உள்ளார்.