“அமிதாப் கேரக்டர்களில் இனி எஸ்.ஏ.சி நடிக்கலாம்” – விக்ரமன் பாராட்டு..!

amithab - sac
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் முழு நேர ஆக்சன் ஹீரோவாக மாறிவிட்டாரோ என நினைக்கும் வகையில் புதிதாக உருவாகியுள்ள ‘நையப்புடை’ படத்தில் ஆடால், பாடல், சண்டை என எல்லா ஏரியாவிலும் புகுந்து விளையாடியுள்ளாராம்.. இந்தப்படத்தின் அறிமுக விழா நேற்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு வாழ்த்தி பேசிய இயக்குனர் விக்ரமன், “.’டூரிங் டாக்கீஸ்’ படத்துல அவர் நடிக்கும் போதே விஜய்க்கு போட்டியா வந்துடுவீங்க போல இருக்கேன்னு நான் சொன்னேன். டான்ஸ் பண்ணிட்டாரு, பைட் பண்ணிட்டாரு, பன்ச் டயலாக் பேசிட்டாருஅதனால் இனிமேல் அமிதாப் பச்சனும், அபிஷேக் பச்சனும் நடிக்கிற மாதிரியான கதாபாத்திரங்கள் இருந்தால் எஸ்.ஏ.சி சாரும், விஜய்யும் சேர்ந்து நடிக்கலாம்” என போகிறபோக்கில் புது ஐடியாவை கொளுத்தி போட்டுவிட்டு போய்விட்டார்.