இந்தியில் தயாராகும் ‘விக்ரம் வேதா’..!

vikram vedha hindi

கடந்த ஜூலை-21ஆம் தேதி விஜய்சேதுபதி, மாதவன் நடிப்பில் ‘விக்ரம் வேதா’ படம் ரிலீஸானது.. புஷ்கர்-காயத்ரி என்கிற இரட்டை இயக்குனர்கள் இயக்கிய இந்தப்படத்தை ஒய் நாட் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்திருந்தது. கேங்க்ஸ்டர் பாணி கதைக்களத்தில் புதுமையாக சொல்லப்பட்டிருந்தது. அதனால் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பையும் பெற்றது.

இந்த நிலையில் இந்தப்படத்தை இந்தியில் தயாரிக்கப்போவதாக ஒய் நாட் ஸ்டுடியோ நிறுவனம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்தியில் சாலா காதூஸ், சுப் மங்கள் சாவ்தான் ஆகிய படங்களை இந்த நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. விக்ரம் வேதாவின் இந்தி ரீமேக்கை ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க இருக்கிறது.