விக்ரம் பிரபு படத்திற்கு ‘பக்கா’வான ‘யு’ சான்றிதழ்..!

pakka censor

விக்ரம் பிரபு தற்போது கதாநாயகனாக நடித்துள்ள படம் தான் ‘பக்கா’. கதாநாயகிகளாக பிந்துமாதவி, நிக்கிகல்ராணி இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், சிங்கம் புலி, வையாபுரி, இமான் அண்ணாச்சிஎன காமெடி பட்டாளமே இதில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் டி.சிவகுமார் நடித்திருக்கிறார்.

திருவிழாக்களில் பொம்மை கடை நடத்தும் கிரிக்கெட் ரசிகரான விக்ரம்பிரபு, ரஜினிகாந்த் பெயரில் ரசிகர் மன்றம் நடத்தும் ரஜினி ரசிகை ரஜினி ராதாவான நிக்கி கல்ராணி, கிராமத்து பெரிய மனிதர் மகள் நதியாவாக பிந்து மாதவி என இவர்கள் மூன்று பேருக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள் தான் கலகலப்பான பக்கா படம்.

நம்மால் மறக்கப்பட்டு வரும் கிராமத்து வாழ்க்கையை பதிவு செய்யும் படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தை சமீபத்தில் பார்த்த சென்சார் குழுவினர் பக்கா கமர்ஷியல் படமாக இருக்கிறது என்று பாராட்டி ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.. படம் விரைவில் வெளியாக உள்ளது.