‘பக்கா’ படத்தில் விக்ரம் பிரபுவின் முதல் முயற்சி..!

vikram-prabhu-bindu-madhavi-pakka-movie

ஒவ்வொரு இளம் ஹீரோவுக்கும் நடிக்க வந்த சில வருடங்களில் டபுள் ஆக்சன் ரோலிலும் போலீஸ் கேரக்டரிலும் நடிக்கவேண்டும் என்கிற ஆசை இயல்பாகவே எழும்.. அந்தவகையில் நடிகராக அறிமுகமாகி சுமார் ஆறுவருடம் ஆன நிலையில் முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் நடிகர் விக்ரம் பிரபு.

ஆம்.. விக்ரம் பிரபு தற்போது கதாநாயகனாக நடித்துள்ள படம் தான் ‘பக்கா’. . சூர்யா என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் தான் இவர் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். கதாநாயகிகளாக நிக்கிகல்ராணி, பிந்துமாதவி இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், சிங்கம் புலி, வையாபுரி, இமான் அண்ணாச்சி என காமெடி பட்டாளமே இதில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் டி.சிவகுமார் நடிக்கிறார்.

டோனி பெயரில் ரசிகர் மன்றம் நடத்தும் அளவுக்கு கிரிக்கெட் வெறியனாக, திருவிழாக்களில் பொம்மை கடை நடத்தும் டோனிகுமார் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் விக்ரம்பிரபு . அதேபோல ரஜினிகாந்த் பெயரில் ரசிகர் மன்றம் நடத்தும் ரஜினி வெறியர் ரஜினி ராதா என்கிற கேரக்டரில் நிக்கி கல்ராணி நடிக்கிறார். கிராமத்து பெரிய மனிதர் மகள் நதியாவாக பிந்து மாதவி நடித்திருக்கிறார்.

இந்தப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.