விக்ரம் பிரபு படத்தயாரிப்பில் இறங்க காரணம் இதுதான்..!

vikram prabhu

விக்ரம் பிரபு நடித்துள்ள ‘சத்ரியன்’ படம் வரும் வெள்ளி அன்று ரிலீஸாக இருக்கிறது.. இந்தப்படம் முன்கூட்டியே ரிலீசாகவேண்டியது, ஒரு சில காரணங்களால் தள்ளிப்போய், இப்போது ரிலீஸாகிறது. விக்ரம் பிரபுவின் மற்ற சில படங்களும் இதேபோன்ற சில சங்கடங்களை சந்தித்தே ரிலீஸாகி இருக்கின்றன..

“மற்றவர்களின் தயாரிப்பில் நடிக்கும்போது நிறைய விஷயங்கள் என் மனதை பாதித்தன. மற்றவர்கள் தயாரிப்பாளர்கள் என்பதால் அவர்கள் மீது என்னால் கோபப்பட முடியாது. என்னுடைய கடந்த சில படங்களில் நடந்த தவறுகளை நேரடியாக பார்த்தபோதுதான் இந்த தவறுகள் இல்லாமல் நாமே படம் பண்ணலாம் என தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்துவிட்டேன்” என்று கூறும் விக்ரம் பிரபு தற்போது ‘நெருப்புடா’ படத்தை தயாரித்து நடித்து வருகிறார்.