விக்ரம் படத்தை உறுதி செய்தார் கமல்..!

vikram kamal

கமலிடம் நீண்ட நாட்களாக இணை இயக்குநராக பணிபுரிந்தவர் ராஜேஷ் எம்.செல்வா. ‘விஸ்வரூபம்’ மற்றும் ‘உத்தமவில்லன்’ படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தது மட்டுமன்றி கமல் நடிப்பில் ‘தூங்காவனம்’ படத்தையும் இயக்கியுள்ளார். இவர் அடுத்தததாக கமல் தயாரிப்பில் விக்ரமை வைத்து படம் இயக்க போகிறார் என சொல்லப்பட்டு வந்தது.

இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் அந்த தகவலை உறுதிப்படுத்தியிருக்கிறார். “விக்ரம், அக்ஷரா ஹாசன், இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனலுடன் இணையும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கும் வாழ்த்துகள். புதிதாய் தொடங்கவிருக்கும் நம் திரைப்படம் வெற்றிகாண விழைவோம்” என்று குறிப்பிட்டுள்ளார் கமல்..