செப்-29ல் களம் இறங்குறான் ‘கருப்பன்’…!

karuppan release date

இந்தமாதம் மட்டும் விஜய்சேதுபதியின் மூன்று படங்கள் ரிலீஸ் என்பது ஆச்சர்யமான விஷயம் தான்.. அவர் சில வருடங்களுக்கு முன்பே நடித்த புரியாத புதிர் படம் சமீபத்தில் ரிலீஸானது.. அதற்கடுத்த வாரம், அதாவது கடந்த வெள்ளியன்று ரிலீஸான ‘கதாநாயகன்’ படத்திலும் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் விஜய்சேதுபதி.

இந்தநிலையில் ‘ரேணிகுண்டா’ பன்னீர்செல்வம் டைரக்சனில் விஜய்சேதுபதி நடித்த ‘கருப்பன்’ படமும் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. தான்யா கதாநாயகியாக நடிக்க, பாபி சிம்ஹா இன்னொரு கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப்படத்திற்கு தணிக்கை குழுவினர் ‘U’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். ஆயுதபூஜை கொண்டாட்டமாக வரும் செப்-29ஆம் தேதி கருப்பனை களம் இறக்குகிறார்கள்.