‘சூப்பர் டீலக்ஸ்’ ஷில்பாவாக மாறிய விஜய்சேதுபதி..!

Vijay Sethupathi as Shilpa

‘ஆரண்ய காண்டம்’ என்கிற ஒரே படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை மட்டுமல்ல, சினிமா விமர்சகர்களின் கவனத்தையும் கவர்ந்தவர் தான் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. முதல் படத்தை அடுத்து சற்று இடைவெளி விட்டவர் தற்போது ஐந்து குறும்படங்களின் இணைப்பாக ஆந்தாலாஜி படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

அதில் ஒவ்வொன்றிலும் விஜய்சேதுபதி, மலையாள நடிகர் பஹத் பாசில், சமந்தா என முன்னணி நட்சத்திரங்களுடன் நதியா, காயத்ரி, பகவதி ஆகியோர் நடித்துள்ளனர்.. தனது முதல் படத்திற்கு சுந்தர தமிழில் ‘ஆரண்ய காண்டம்’ என பெயர் வைத்த குமாரராஜா, தற்போது இந்தப்படத்திற்கு சூப்பர் டீலக்ஸ் என ஆங்கிலத்தில் டைட்டில் வைத்துள்ளார்..

இந்தப்படத்தில் இன்னொரு சிறப்பம்சமாக விஜய்சேதுபதி ஷில்பா என்கிற பெண் கேரக்டரில் நடித்துள்ளார். இந்தப்படத்தின் கதை உருவாக்கத்தில் குமாரராஜவுடன் இயக்குனர்கள் மிஷ்கின், நலன் குமாரசாமி, நீலன் சங்கர் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.