சங்கத்தமிழன் ஆனார் விஜய்சேதுபதி

விக்ரம் நடித்த ஸ்கெட்ச் படத்தை இயக்கியவர் விஜய்சந்தர்.. இவர் தற்போது விஜய்சேதுபதி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார்.. எங்க வீட்டு பிள்ளை, உழைப்பாளி, வீரம், பைரவா உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பாரம்பரிய நிறுவனமான “விஜயா புரொடக்க்ஷன்ஸ்” இந்தப்படத்தை தயாரிக்கிறது.

ராஷி கன்னா, நிவேதா பெத்துராஜ், சூரி, நாசர், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப்படத்திற்கு தற்போது சங்கத்தமிழன் என பெயர் வைத்துள்ளார்கள்.