தலைவி படத்திற்காக விஜய்யுடன் கூட்டணி சேர்ந்த பாகுபலி கதாசிரியர்

thalaivi

மறைந்த முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறை தலைவி என்கிற பெயரில் படமாக இயக்குகிறார் இயக்குனர் விஜய். இந்த படத்திற்கான அனுமதியை ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் இடமிருந்து பெற்ற பின்னரே இந்த படத்தை தொடங்கியுள்ளனர். ஜெயலலிதாவின் பிறந்தநாளான நேற்று இந்த படத்தின் தலைப்பை வெளியிட்டுள்ளனர்

பாகுபலி படத்தின் வெற்றிக்கு அடித்தளமாக இருந்த கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் இந்த படத்தில் இணை கதாசிரியராக இணைகிறார். நீரவ்ஷா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இதில் ஜெயலலிதாவாக நடிக்கப்போவது யார் என்பது உட்பட மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது