ரஜினியை நலம் விசாரித்த விஜய்யின் அம்மா..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் வெற்றிகரமாக ஓடிகொண்டு இருக்கிறது. இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டார். அந்த திருமண விழாவில் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகரனும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

மேலும் அந்த விழாவில் ரஜினியை சந்தித்த ஷோபா சந்திரசேகர் மகிழ்ச்சியுடன் நலம் விசாரித்தார் மேலும் அவருடன் இணைந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார் அந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினி 30 வருடங்களுக்கு முன்பு விஜய் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் நான் சிகப்பு மனிதன் என்கிற சூப்பர் ஹிட் படத்தில் நடித்துள்ளார் என்பதும் அந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிகர் விஜய்யும் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.