விஜய் பட இயக்குனரின் ‘தி புரோக்கர்’ பூஜையுடன் துவங்கியது..!

‘தமிழன்’,’ பைசா’, ‘டார்ச் லைட்’ படங்களுக்குப் பின் இயக்குநர் மஜீத் இயக்கும் படம் ‘தி புரோக்கர்’ .இப்படம் இன்று பூஜையுடன் தொடங்கியது. நாயகனாக விமல், யோகி பாபு, ‘அண்ணாதுரை’ பட நாயகி டயானா சாம்பிகா, எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, வினோத், தம்பி ராமையா,மயில்சாமி மற்றும் காமெடி நட்சத்திரங்கள் பலர் நடிக்கிறார்கள்.

இது திருமணத்துக்குப் பெண் பார்க்கும் தரகர் சம்பந்தப்பட்ட கதை. திருமணம் சார்ந்த பின்னணியில் படம் உருவாவதால் கலகலப்புக்கும் விறுவிறுப்புக்கும் படத்தில் பஞ்சமில்லை. நட்சத்திர பட்டாளங்கள் படம் முழுக்க காமெடி திருவிழாவாக இருக்கும்.”நம்பி வாங்க சந்தோஷமா போங்க”. கான்பிடன்ட் பிலிம் கேஃப் சார்பில் படம் உருவாகிறது. பூஜையுடன் படப்பிடிப்பு சென்னையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.