‘எமன்’ விஜய் ஆண்டனியை காண காத்திருக்கும் விஜய்சேதுபதி..!

Yeman-55

பிச்சைக்காரன், சைத்தான் படங்களின் வெற்றியை தொடர்ந்து விஜய் ஆண்டனி தற்போது நடித்துள்ள ‘எமன்’ படம் இன்னும் அதிக எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இந்தநிலையில் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இசைத்தகட்டை பெற்றுக்கொண்டார் விஜய்சேதுபதி.

இந்த நிகழ்வில் அவர் பேசியது, “முதலில் ‘எமன்’ படத்தின் கதையை ஜீவா ஷங்கர் என்னிடம் தான் கூறினார், ஆனால் தற்போது அந்த கதைக்கு கனகச்சிதமாக பொருந்தி இருப்பது விஜய் ஆண்டனி தான் என்பதை நினைக்கும் பொழுது அளவு கடந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. முதல் முறையாக இந்த படத்தில் விஜய் ஆண்டனி நடனம் ஆடி இருக்கிறார். அதை பார்ப்பதற்காக நான் ஆவலோடு காத்து கொண்டிருக்கிறேன்” என்று உற்சாகமாக கூறினார் விஜய் சேதுபதி.