இந்தவாரம் வெளியான படங்களில் ‘தெரு நாய்கள்’ படம் சமூக அக்கறையுடன் இன்றைய நடப்பு நிகழ்வுகளை சுட்டிக்காட்டி இருந்தது.. குறிப்பாக விவசாயிகளை கலங்கடிக்கும் மீத்தேன் திட்டத்தையும் அதில் அப்பாவி மக்கள் எப்படி அரசியல்வாதிகளால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் கொஞ்சமும் பூசி மெழுகாமல் சொல்லியிருந்தார்கள்.
ஹரி உத்ரா என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் இமான் அண்ணாச்சி, பாவல் நவகீதன், ராம்ஸ், அப்புக்குட்டி, மதுசூதன் ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.. இந்தப்படத்தை பார்த்த இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி படக்குழுவினரை அழைத்து தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.