விஜயகுமாரின் கலைச்சேவையை பாராட்டி டாக்டர் பட்டம்..!

தமிழ்சினிமா திரைப்படங்களிலும் சரி, அதன் பொது விஷயங்களிலும் சரி ஒரு சில குறிப்பிட்ட நடிகர்களின் பங்களிப்பை தவிர்க்கவே முடியாது. அப்படி ஒருவர்தான் நடிகர் விஜயகுமார். ‘பொண்ணுக்கு தங்கமனசு’ என்ற திரைப்படத்தின் முலமாக கதாநாயகனாக சினிமாவில் அறிமுகமாகி கடந்த 44 ஆண்டுகளுக்கு மேலாக அவர் கலைச்சேவையாற்றி வருகிறார்.

இவரது கலைச்சேவையை கௌரவிக்கும் விதமாக நடிகர் விஜயகுமாருக்கு எம்.ஜி.ஆர் நகர் நிலை பல்கலைகழகம் டாக்டர் பட்டம் அளித்து அவரை கௌரவிக்க உள்ளது. டாக்டர் பட்டம் பெற்ற விஜயகுமாருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. வரும் ஏப்- 18ஆம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது. விஜயகுமாருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.