ரசிகர் குடும்பத்தினர் முன் கண்ணீர் விட்ட விஜய்..!

 

தீபாவாளியன்று கேரளாவில் வெளியான ‘கத்தி’ படத்தை பார்க்கசென்ற விஜய் ரசிகரான வடக்கஞ்ச்சேரியை சேர்ந்து உன்னிகிருஷ்ணன் என்பவர் விஜய்யின் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும்போது மேலிருந்து தவறி விழுந்து இறந்தார். இதை கேள்விப்பட்டு அதிர்ச்சியான விஜய் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் செய்தி அனுப்பியிருந்தார்.

ஆனால் வெறும் காகித இரங்கல் மட்டும் பாதிக்கப்பட்ட ரசிகர் குடும்பத்தின் துயரத்தை போக்கிவிடமுடியாது என்பது விஜய்க்கு தெரியாதா என்ன..? அதனாலேயே நேற்று கோவை சென்ற விஜய், அங்கே அழைத்துவரப்பட்ட உன்னிகிருஷ்ணனின் குடும்பத்தை சந்தித்தார்.

அவர்களை பார்த்ததும் விஜய்யின் கண்களில் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. மிகவும் நெகிழ்ச்சியான அந்த தருணத்தில் அந்த குடும்பத்தின் எதிர்காலத்தை முன்னிட்டு அவர்களிடம் மூன்று லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார் விஜய். விஜய் செய்த உதவி நல்ல விஷயம் என்றாலும் வரும் காலங்களில் ரசிகர்கள் இப்படிப்பட்ட ஆபத்தான காரியங்களில் ஈடுபடாமல் இருப்பதுதான் நால்லது.